புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

25. பத்தனாய் பாடமாட்டேன் - பாடல் 3

சிவபெருமானே, இந்நாள் வரை உனது திருநடனத்தின் சிறப்பினை நான் கேட்டு அறிந்ததில்லை.

Updated On :18 மே 2016, 11:49 am

பாடல் 3

கேட்டிலேன் கிளை பிரியேன் கேட்குமா கேட்டியாகில்
நாட்டினேன் நின்றன் பாதம் நடுப்பட நெஞ்சினுள்ளே
மாட்டினீர் வாளை பாயும் மல்கு சிற்றம்பலத்தே
கூட்டமாம் குவி முலையாள் கூட நீ ஆடுமாறே

விளக்கம்

மாடு = பக்கம். மாடு+நீர் என்பது மாட்டினீர் என்று இணைந்துள்ளது. தான் சிவபிரானை விளம்புதற்கும், பணிவதற்கும், நினைப்பதற்கும், விரும்புதற்கும், சிவபிரானின் திருவருள் கூடவேண்டும் என்று சேந்தனார் பாடுவது (ஒன்பதாம் திருமுறை முதல் பதிகம்) போல் அப்பர் பிரான் இங்கே, சிவபிரானின் சிறப்புகளைத் தான் கேட்பதற்கு அவனது திருவருள் கூட வேண்டும் என்று இங்கே வேண்டுகின்றார்.

பொழிப்புரை

சிவபெருமானே, இந்நாள் வரை உனது திருநடனத்தின் சிறப்பினை நான் கேட்டு அறிந்ததில்லை. உனது அடியார்களுடன் கூட இருந்து அவர்கள் மூலம் உனது சிறப்பியல்புகள் பலவற்றையும் நான் கேட்க உனது திருவருள் கூடவேண்டும். அடியார்கள் மூலமாக உனது திருநடனத்தின் சிறப்பினைக் கேட்ட பின்னர், அந்த செய்தியினை எனது நெஞ்சினில் நிலைநிறுத்திக்கொண்டேன். நீர்நிலைகளில் வாளை மீன்கள் பாயும் நீர்வளம் மிகுந்த தில்லையில் உள்ள சிற்றம்பலத்தே, உனது அடியார் குழாங்கள் ஒரு புறமும் மறுபுறத்தில் உமையம்மை நிற்க நீ நடமாடும் அழகிய காட்சி எனது மனத்தினில் குடி கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.