புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

25. பத்தனாய் பாடமாட்டேன் - பாடல் 9

மனம் தூய்மையாக இல்லாத காரணத்தால் தான், ஒருவரது உள்ளம் கண்ட வழியில் சென்று அலைகின்றது. தனது நெஞ்சம்

Updated On :21 மே 2016, 7:06 am

பாடல் 9

நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே
வஞ்சமே செய்தியாலோ வானவர் தலைவனே நீ
மஞ்சடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
அஞ்சொலாள் காண நின்று அழக நீ ஆடுமாறே

விளக்கம்

மனம் தூய்மையாக இல்லாத காரணத்தால் தான், ஒருவரது உள்ளம் கண்ட வழியில் சென்று அலைகின்றது. தனது நெஞ்சம் தூய்மையாக இருப்பதற்கு சிவபிரானது திருவருள் வேண்டும் என்று இங்கே வேண்டுகின்றார்.

பொழிப்புரை:

நான் எனது நெஞ்சத்தினை, அழுக்குகள் நீக்கி தூய்மையாக வைத்துக் கொள்ள நினைக்கின்றேன். வானவர் தலைவனாகிய சிவபெருமானே, அதற்கு திருவருள் புரியாமல் நீ ஏன் வஞ்சனை செய்கின்றாய். மேகங்கள் தவழும் உயர்ந்த மரங்கள் கொண்ட சோலைகள் உடைய தில்லைச் சிற்றம்பலத்திலே அழகிய சொற்களை உடைய உமையம்மை காணுமாறு நீ நடனம் ஆடுகின்றாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.