பாடல் 10
மண்ணுண்ட மாலவனும் மலர்மிசை மன்னினானும்
விண்ணுண்ட திருவுருவம் விரும்பினார் காண மாட்டார்
திண்ணுண்ட திருவே மிக்க தில்லைச் சிற்றம்பலத்தே
பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடுமாறே

விளக்கம்

விண்ணுண்ட = விண்ணைக் கடந்து நின்ற. அஞ்சொலாள் காண நின்று என்று சிவபிரானின் நடனத்திற்கு ஏற்ப உமையம்மை பாடியதை சென்ற பாடலில் குறிப்பால் உணர்த்திய அப்பர் பிரான் இங்கே பண் பொருந்திய பாடல் என்று உமையம்மை பாடியதை குறிப்பிடுகின்றார்.

திருவாய்மூர் தலத்திற்குச் சென்ற அப்பர் பெருமானைப் பின்தொடர்ந்து சென்ற ஞானசம்பந்தர், இறைவன் அளித்த நடனக் காட்சியினை அப்பர் பெருமானுக்கு உணர்த்துகின்றார். அந்த கோலத்தை விவரிக்கும் சம்பந்தர், உமையம்மை சிவபிரானின் அருகில் இருந்து தாளம் இட்டுக்கொண்டு பாடுவதாக குறிப்பிடுகின்றார்.

தளிர் இளவளர் என உமை பாடத் தாளம் இடவோர் கழல் வீசிக்
கிளரிள மணி அரவு அரை ஆர்த்தாடும் வேடக் கிறிமையார்
விளரிள முலையவர்க்கு அருள் நல்கி வெண்ணீறு அணிந்தோர் சென்னியின் மேல்
வளரிள மதியமொடு இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

பொழிப்புரை

செல்வம் மலிந்த தில்லைச் சிற்றம்பலத்தில் பண் பொருந்திய உமையம்மையின் பாடலுக்கு நடமாடும் பரமனே, கண்ணபிரானாய் இருந்த போது மண்ணினை உண்ட திருமாலும், தாமரை மலர்மேல் இருக்கும் பிரமனும், விண்ணைக் கடந்து நின்ற உனது திருவுருவத்தினைக் காண முடியாமல் வருந்தினார்கள்.

முடிவுரை

தில்லையில் பல பதிகங்கள் அருளிச் செய்து, அப்பர் பிரான் மகிழ்ந்து இருந்தபோது, சீர்காழியில் சிவபிரான் அருளால் ஞானப்பால் அளிக்கப்பட்ட பின்னர் தேவாரப் பதிகங்கள் பாடத் தொடங்கிய திருஞான சம்பந்தரின் சிறப்புகளை, தில்லையில் இருந்த அடியார்கள் சொல்லக் கேட்ட அப்பர் பிரான், சீர்காழி சென்று ஞானசம்பந்தப் பெருமானை சந்திக்க எண்ணினார். அம்பலத்தில் ஆடுகின்ற தில்லைப்பெருமானின் கழல் வணங்கிய பின்னர் புனிதமான தில்லைத் திருவீதிகளில் புரண்டு வலம் வந்த பின்னரே, தில்லையிலிருந்து அப்பர் பிரான் புறப்பட்டார் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை