பாடல் 2
அரும்பு அற்றப்பட ஆய்மலர் கொண்டு நீர்
சுரும்பு அற்றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற்றப் புலியூர் எம் பிரானையே

விளக்கம்

அரும்பு = முழுவதும் மலராத மலர் மொட்டு. அற்றப்பட = நீக்கி. ஆய் மலர் = ஆராய்ந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மலர்கள். சுரும்பு = வண்டு. சிலை = வில். அற்றம் = அழிவு. மன்மதனுக்கு அழிவை வரவழைத்தமையால், கரும்பு வில், கரும்பு அற்றச் சிலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படும் வியாக்ரபாதர், இறைவனைத் தொழுத தலங்கள் புலியூர் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன, தில்லைச்சிதம்பரம், ஓமாம்புலியூர், திருப்பாதிரிப் புலியூர் (கடலூர்), பெரும்புலியூர் மற்றும் எருக்கத்தம்புலியூர் ஆகும். மிகவும் அதிகமான பற்று கொண்டு வியாக்ரபாதர் தில்லைச் சிற்றம்பலத்தானை வழிபட்டமையால், பெரும்பற்றப்புலியூர் என்ற பெயர் தில்லைக்கு ஏற்பட்டது.

மலர்களைப் பறித்து வழிபடுவதில், மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் வியாக்ரபாதர். வண்டுகள் பூக்களில் உள்ள தேனைச் சுவைப்பதால், மலர்களின் தூய்மை குறைகின்றது என்று எண்ணிய முனிவர் அத்தகைய பூக்கள் இறைவனின் வழிபாட்டுக்கு உகந்தது அல்ல என்ற முடிவுக்கு வந்தார். அதனால் வண்டு சுவைக்கும் முன்னரே பூக்களைப் பறிக்க ஆசைப்பட்டார். அதற்கு வசதியாக விடியற்காலை இருட்டினில் தனக்கு கண்கள் நன்றாக தெரிய வேண்டும் என்றும், தான் மரத்தினில் ஏறும்போது பனியினால் நனைந்து இருக்கும் மரங்களின் தண்டுகளும் கிளைகளும், வழுக்காமல் இருக்க வேண்டும் என்றும் விரும்பிய முனிவர், இறைவனிடம் தனக்கு புலிக்கு உள்ளது போன்ற கண்களும் கால்களும் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார். இறைவன் அருளால் அவரது ஆசை நிறைவேறியது. அன்று முதல் முனிவர் வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்டார். வியாக்ரம் என்றால் வடமொழியில் புலி என்று பொருள். இறைவனை வழிபட உதவும் மலர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்று கூறும் அப்பர் பிரானுக்கு, வியாக்ரபாதர் நினவு வந்தது இயற்கையே. இந்த பதிகத்தின் மற்ற பாடல்களில் தில்லை என்றும், அம்பலம் என்றும், தில்லைச் சிற்றம்பலம் என்றும் சிற்றம்பலம் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், இந்த பாடலில் மட்டும் வியாக்ரபாதர் செய்த வழிபாட்டினை நினைவூட்டும் வகையில் பெரும்பற்றப் புலியூர் என்ற பெயரினை பயன்படுத்துகின்றார்.

மலர் கொண்டு தூவித் தொழுமினோ என்று அப்பர் பிரான் கூறுவதன் காரணம், அடுத்த அடியில் விளக்கப்பட்டுள்ளது. மன்மதனும் தனது கரும்பு வில்லில் மலர்களைப் பூட்டி, இறைவன் மேல் பொழிந்தான். ஆனால் அவனது செய்கையில் பக்தி இல்லை; இறைவனது தவத்தினைக் கலைக்க வேண்டும் என்ற நோக்கம் தான் இருந்தது. அதனால் தான் அவன் இறைவனால் எரிக்கப்பட்டான். மலர்கள் கிடைக்காத போது, பக்தியுடன் இலை கொண்டு வழிபடுவதையும் சிவபிரான் ஏற்றுகொள்கின்றார். ஏன், கல் எறிந்த சாக்கியருக்கும் அருள் செய்தவன் அல்லவா. சிவபெருமான். மறவாது கல் எறிந்த சாக்கியார் என்று சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடுகின்றார். ஒருநாளும் மறவாது, தினமும் தான் உண்பதன் முன்னர், கல் கொண்டு இறைவனை வழிபட்டவர் சாக்கிய நாயனார். அவரது பக்தியின் காரணமாக, அவர் எறிந்த கல்லும், மலராக கருதப்பட்டு, இறைவன் அவருக்கு முக்தி அளித்த வரலாறு பெரிய புராணத்தில் காணப்படுகின்றது.

இவ்வாறு இறைவனை மலர் தூவித் தொழுவதால் நமக்கு கிடைக்கும் பயன் என்ன என்பதை அப்பர் பிரான் திருவையாற்றுப் பதிகத்தின் ஒரு பாடலில் கூறுகின்றார் (பதிக எண்: 4.80). சகம் = உலகம், இங்கே உலகத்தில் உள்ள உயிர்களைக் குறிக்கின்றது. துணை என்ற சொல் இணை என்ற பொருளில் இங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது. சிவபிரானுக்கு ஒப்பாக சொல்லக்கூடியவர் வேறு எவரும் இல்லை என்ற உண்மை இங்கே உணர்த்தப்படுகின்றது. நாண்மலர் = அன்று பூத்த மலர்கள்; தங்கள் நகங்கள் தேயும் அளவுக்கு மலர்களைப் பறித்து, பக்தியினால் கண்ணீர் சோர இறைவனை வணங்கும் அன்பர்களின் மனதினைக் கோயிலாகக் கொண்டு, அங்கே இறைவனை குடி கொள்வான் என்று நமக்கு கூறி, இறைவனை எவ்வாறு வணங்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் பாடல் இது.

சகம் அலாது அடிமை இல்லை தான் அலால் துணையும் இல்லை
நகம் எலாம் தேயக் கையால் நாண் மலர் தொழுது தூவி
முகம் எல்லாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர்
அகம் அலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே

பொழிப்புரை

தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த, மன்மதனை, கரும்பு வில்லால் அழிவு தேடிக்கொண்ட மன்மதனை, தனது நெற்றிக் கண்ணை விழித்து எரித்தவனும் பெரும்பற்றப்புலியூரில் உறைபவனும் ஆகிய நமது தலைவனை, மொட்டுகளை நீக்கியும், வண்டுகள் நுகராத மலர்களையும் தேர்ந்தெடுத்து, அத்தகைய மலர்களைக் கொண்டு அவனது திருப்பாதங்களில் மலர்களைத் தூவி வழிபடுவீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை