மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

38.  மாது இயன்று மனைக்கு - பாடல் 8

சிவபெருமான் பேரில் தீராத காதல் கொள்ளும்

Updated On :1 அக்டோபர் 2016, 6:30 pm

பாடல் 8

    உறவு பேய்க்கணம் உண்பது வெண்தலை
    உறைவது ஈமம் உடலிலோர் பெண்கொடி
    துறைகள் ஆர் கடல் தோணிபுரத்துறை
    இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பாவதே

விளக்கம்

தனது மகள் சிவபெருமான் பேரில் தீராத காதல் கொள்ளும் அளவுக்கு, சிவபெருமானின் எந்த அம்சம், தனது பெண்ணின் கருத்தினைக் கவர்ந்தது என்பதை யோசித்துப் பார்க்கும் தாய்க்கு, சிறப்பான அம்சமாக எதனையும் உணர முடியவில்லை. எதனைக் கண்டு தனது பெண் சிவபிரான் பால் அப்பர் நாயகி காதல் கொண்டாள் என்று வியக்கும் பாடல். ஈமம் = சுடுகாடு.

பொழிப்புரை

சிவபெருமானின் உறவுகளாக, அவனை எப்போதும் சூழ்ந்து இருப்பன பேயக்கணங்கள்; அவனது உண்கலனோ, உலர்ந்த மண்டையோடு; அவனது இருப்பிடமோ சுடுகாடு;. அவனது உடலில் ஒரு பாகத்தில் இருப்பதோ பார்வதி. இவ்வாறு காணப்படும் சிவபெருமான்தான், சிறந்த துறைமுகமாக விளங்கும் தோணிபுரத்து இறைவர். இவரிடம் உள்ள எந்த அம்சத்தை பெருமையாக கருதி எனது பெண் அவர் மீது தீராத காதல் கொண்டுள்ளாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.