பாடல் 2
சீர்த்தானைச் சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானைச்
சிவன் தன்னைத் தேவதேவைக்
கூர்த்தானைக் கொடு நெடுவேல் கூற்றம் தன்னைக் குரை கழலால்
குமைத்து முனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பு ஒன்றில்லாப் பெம்மானைக்
கைம்மாவின் உரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற
நாள் போக்கினேனே
விளக்கம்
சிவன் = மங்கலமாக உள்ளவன். கைம்மா = துதிக்கை உடைய விலங்காகிய யானை. சீர்த்தான் = வாய்ப்பாக அமைந்தவன். தன்னை சிவபெருமான அடிமையாக ஏற்றுக்கொண்டு ஆட்கொண்டதை பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்டு உளம் நெகிழ்ந்த அப்பர் பிரான், அவ்வாறு சிவபெருமான் ஆட்கொண்டதை தனது வாழ்க்கையின் கிடைத்தற்கரிய பெரிய வாய்ப்பாக கருதியது இந்த பாடலில் புலப்படுகின்றது. கூற்றுவன்போல் தன்னை வருத்திய நோய் என்று, சூலை நோயின் கொடுமை தாங்காமல் தனது வாழ்க்கையில் முதல் பதிகத்தை பாடிய அப்பர் பிரான், சூலை நோய் பெருமானால் தீர்க்கப்பட்ட பின்னர், பெருமானுக்கு அடிமையாக மாறி தனது வாழ்க்கையின் எஞ்சிய நாட்களைக் கழித்ததை நாம் அனைவரும் அறிவோம். தனது தமக்கை திலகவதியார் மூலம், திலகவதியாரின் பக்திக்கு வயப்பட்டே, சிவபெருமான் தனக்கு சூலை நோய் கொடுத்து ஆட்கொண்டார் என்பதை அறிந்தார் போலும். சூலை நோய் தீர்த்து தன்னை ஆட்கொண்ட சிவபெருமானுக்கு நன்றி கூறும் அப்பர் பிரான், பெருமானை தான் நாடுமாறு செய்த சூலை நோய்க்கு என்ன கைம்மாறு செய்வேன் என்று கூறியதாக சேக்கிழார் பெரியபுராணத்தில் உணர்த்துகின்றார்.
அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடையப் புளகங்கள்
முகிழ்த்து அலரப்
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழியப் புவி மீது விழுந்து
புரண்டு அயர்வார்
இங்கு என் செயல் உற்ற பிழைப்பதனால் ஏறாத பெருந்திடர்
ஏறிட நின்
தங்கும் கருணைப் பெருவெள்ளம் இடத் தகுமோ இன்னன
தாம் மொழிவார்
வெள்ளம் வரும்போது, ஆழ்குழியில் உள்ள பொருட்கள், குழியை நிரப்பிய வெள்ளத்தின் வேகத்தில் மேல் வந்து, பின்னர் அந்த வெள்ளத்துடன் குழியிலிருந்து வெளியேறுவதை நாம் காண்கின்றோம். இந்த செயலுக்கு, இறைவனின் கருணையை இங்கே அப்பர் பிரான் ஒப்பிட்டதாக சேக்கிழார் கூறுகின்றார். சமண சமயம் என்னும் ஆழ்குழிப்பட்டு அழுந்தி நின்ற தன்னை, சிவபெருமானின் கருணை வெள்ளம், ஆழ்குழியிலிருந்து வெளியே கொண்டுவர உதவியது என்று அப்பர் பிரான் நினைத்தார் என்று சேக்கிழார் உணர்த்துகின்றார். மற்ற வெள்ளங்களைப் போன்று சில நாட்கள் கழித்து வடிந்துவிட்ட வெள்ளம் அல்ல என்றும், தான் இறைவனை விட்டு என்றும் நீங்காது இருப்பதற்கு உதவிய வெள்ளம் என்பதை உணர்த்தும் வகையில் தங்கும் கருணைப் பெருவெள்ளம் என்ற தொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சேக்கிழார் கூறியதாக பொருள் கொள்வதும் உண்டு. கருணைப் பெருவெள்ளம் இடத் தகுமோ என்று, சிவபெருமானின் கருணைக்குத் தான் பாத்திரமானவனா என்று தன்னையே அப்பர் பிரான் கேட்டுக்கொண்டார் என்று சேக்கிழார் இந்த பாடலில் கூறுகின்றார். தனக்கு அத்தகைய தகுதி உள்ளதா என்ற ஐயம் அப்பர் பிரானுக்கு வந்ததன் காரணம், தான் சமண சமயத்தைச் சார்ந்து பல வருடங்கள் கழித்ததை மிகவும் இழிந்த செயலாக அவர் கருதியதுதான்.
பெரிய புராணத்தின் அடுத்த பாடலில், சிவபெருமானைப் பணிந்து வாழும் வாழ்வு அடைந்ததற்கு சூலை நோய்தான் காரணம் என்பதால், அந்த சூலை நோயினுக்கு, தகுந்த கைம்மாறாக தான் எவ்வாறு உதவி செய்யமுடியும் என்று அப்பர் பிரான் வியந்து, அந்த சூலை நோயினைத் தொழுததாக சேக்கிழார் இந்த பாடலில் கூறுகின்றார். சமண சமயத்தை ஆழ்குழி என்று அப்பர் பிரான் கருதியதை, இந்த பாடலில் நமக்கு சேக்கிழார் உணர்த்துகின்றார். சமண சமயக் குழியில் விழுந்த அப்பர் பிரான், அந்த குழியிலிருந்து வெளியே வரும் வழி அறியாமல் திகைத்ததாக சேக்கிழார் இந்த பாடலில் கூறுகின்றார்.
பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப் பொறியில் சமண்நீசர்
புறத்துறையாம்
அவ்வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி
அவம் புரிவேன்
மைவாச நறுங்குழல் மாமலையாள் மணவாளன் மலர்க்கழல்
வந்தடையும்
இவ்வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு எதிர் செய் குறை என்கொல்
எனத் தொழுதார்
பொழிப்புரை
அடியேனுடைய உள்ளத்தில் தான் சிறப்பாக பொருந்தி இருக்கும் வாய்ப்பினை எனக்கு அருளியவனும், மங்கலமாக விளங்குபவனும், அனைத்து தேவர்களுக்கும் தலைவனாக விளங்குபவனும், உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் நுண்ணியனாகத் திகழ்பவனும், கொடிய நீண்ட வேலினை ஏந்திவந்த கூற்றுவனை, ஒலிக்கும் கழலினை அணிந்த தனது காலால் உதைத்து அழித்து, காலன் தன்னை அணுகியதால் முனிவனாகிய சிறுவன் மார்க்கண்டேயன் அடைந்த அச்சத்தைத் தவிர்த்தவனும், பிறப்பு இல்லாதவனும், இறப்பினைக் கடந்த தலைவனும், துதிக்கையினை உடைய யானையைக் கொன்று அதன் தோலைத் தனது உடலில் போர்த்தவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

