பாடல் 11
மதியிலா அரக்கன் ஓடி மாமலை எடுக்க நோக்கி
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடிரும் பொழில்கள் சூழ்ந்த
மதியம் தோய் தில்லை தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே
அதிசயம் போல நின்று அனல் எரி ஆடுமாறே
விளக்கம்
நெதியன் = தீயவன். மதியம் தோய் தில்லை = சந்திரனை எட்டும் அளவுக்கு உயர்ந்த மரங்கள் கொண்ட சோலைகள் உடைய தில்லை நகரம்.
பொழிப்புரை
அறிவில்லாதவனாக அரக்கன் இராவணன், கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்தபோது, அந்த தீயவனின் தோள்கள் நொறுங்குமாறு, தனது கால் விரலினை ஊன்றிய சிவபெருமான், சந்திரனை எட்டும் அளவுக்கு உயர்ந்த மரங்கள் கொண்ட சோலைகள் சூழ்ந்த தில்லையில் விளங்கும் சிற்றம்பலத்தில், உலகத்தவர் அனைவரும் வியக்குமாறு, ஊழித் தீயில் நின்று ஆடுகின்றார். இவரது ஆடல் ஒரு அதிசயம் என்று அனைவரும் கருதுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெயா் குழப்பம்! 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்!

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

