பாடல் 3
வேடு தங்கிய வேடமும் வெண்தலை
ஓடு தங்கிய உண் பலி கொள்கையும்
நாடு தங்கிய நாரையூரான் நடம்
ஆடு பைங்கழல் அம்ம அழகிதே
விளக்கம்
பொதுவாக, வேடம் தரிப்பவர்கள் தங்களது அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் வேடங்களையே விரும்பி ஏற்பார்கள். ஆனால், பெருமானோ வேடுவக் கோலத்தை விரும்பி ஏற்றவராக உள்ளார். அவரது உண்கலனோ காய்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும், அருவருக்கத்தக்க மண்டையோடு.
பொழிப்புரை
அழகு ஏதும் இல்லாத வேடுவக் கோலம் தாங்கினாலும், அனைவரும் அருவருக்கும் நிலையில் உள்ள காய்ந்து வெண்மை நிறத்துடன் காணப்படும் மண்டையோட்டினை கையில் ஏந்தி திரியும் கோலத்துடன் இருந்தாலும், பெருமானின் திருமேனி வியப்பு ஊட்டும் அழகுடன் காணப்படுகின்றது. பெருமை வாய்ந்த நகராகிய நாரையூரில் உறையும் பெருமானின் நடனம் ஆடும் பசுமையான திருவடிகள் மிகுந்த அழகுடன் காணப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெயா் குழப்பம்! 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்!

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

