ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

57. பாறலைத்த படுவெண் - பாடல் 6

உயிர்களுக்கு நலம் நல்கும்

Updated On :6 ஏப்ரல் 2017, 12:22 pm

வெந்த நீறு மெய் பூசு நன்மேனியர்
கந்த மா மலர் சூடும் கருத்தினர்
சிந்தையார் சிவனார் செய்ய தீ வண்ணர்
அந்தணாளர் கண்டீர் அன்னியூரரே
 

விளக்கம்

வெந்த நீறு = திருநீறு. சிவம் = மங்களம். சிவனார் = மங்களம் செய்பவர். அந்தணாளர் = அம்+தண்+ஆளர், உள்ளத்தில் குளிர்ச்சி, அதாவது கருணை உடையவர். சிந்தையார் = அடியார்களின் சிந்தைனையில் நிறைந்தவர். இறைவனை அறவாழி அந்தணன் என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. உயிர்களின் நன்மை கருதி அறம் உரைத்த பெருமான், அறத்தின் வடிவமாகவும் அறத்தின் பயனாகவும் இருந்து உயிர்களுக்கு அருள்புரியும் பொருட்டே என்பதால் குளிர்ந்த மனதினை உடையவன் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீத்தல் அரிது

பொழிப்புரை

திருநீற்றினை தனது உடல் முழுவதும் பூசுபவரும், உயிர்களுக்கு நலம் நல்கும் திருமேனியை உடையவரும் ஆகிய பெருமான், நறுமணம் நிறைந்த மலர்களை விருப்பத்துடன் சூடும் எண்ணத்தினை உடையவராக விளங்குகின்றார். அடியார்களின் சிந்தனையில் நிறைந்துள்ள பெருமான், உயிர்களுக்கு நன்மைகள் செய்பவராகவும், சிவந்த மேனியராகவும், திகழ்கின்றார். உயிர்கள் பால் கருணை கொண்டு உயிர்கள் உய்யும் பொருட்டு அறத்தினை உரைத்த பெருமான், அறத்தின் வடிவாகவும் பயனாகவும் விளங்குகின்றார். அவர்தான் அன்னியூர் தளத்தில் உறைகின்றார் என்பதை உணர்ந்து அவரைக் கண்டு மகிழ்வீராக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.