ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

53. கொள்ளும் காதன்மை -  பாடல் 7

மணிவாசகர் இந்த பாடலில்

Updated On :22 மார்ச் 2017, 10:56 am

நீற்றினான் நிமிர் புன்சடையான் விடை
ஏற்றினான் நமை ஆளுடையான் புலன்
மாற்றினான் மயிலாடுதுறை என்று
போற்றுவார்க்கு உண்டோ புவி வாழ்க்கையே
 

விளக்கம்

புலன் மாற்றினான் = ஐம்புலன்களின் தன்மையினை மாற்றியவன். ஐந்து புலன்களும் தங்களின் விருப்பத்தின் வழியே மனதினையும் உயிரையும் செயல்படவைத்து மேலும் மேலும் வினைகளை பெருக்கி, அடுத்த பிறவிகளுக்கு அடிகோலுகின்றன. எனவே நமது புலன்களை அடக்குவதன் மூலம், நாம் நமது வினைப் பெருக்கத்தினை கட்டுப்படுத்த முடியும். புலன்களை அடக்கி நம் வசத்தில் கொண்டு வருவதற்கு உதவுபவன் பெருமான் என்பதால், பெருமானை வழிபடுவதால் இந்த உலக வாழ்கையை நாம் தவிர்க்கலாம் என்று அறிவுரை கூறும் பதிகம். நமது உடல் பெருமானின் திருக்கோயிலை வலம் வந்தும் திருநீற்றினை அணிந்தும், இறைவனது வழிபாட்டில் ஈடுபட வேண்டும்; வாயானது பெருமானது புகழினைப் பாடியும், மூக்கானது காற்றினை உள்ளே இழுத்து பெருமானை தியானித்தும், கண்ணானது பெருமானைத் தரிசித்தும், காதானது அவனது புகழினைக் கேட்டும் அவனது வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது. இவ்வாறு அப்பர் பிரான் உணர்த்துவது, நமக்கு திருவாசகம் யாத்திரைப் பத்து பதிகத்தின் பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது.

புகவே வேண்டா புலங்களில் நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்க எல்லாம் வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத்துள் புகுந்து நாயே அனைய நமை ஆண்ட
தகவே உடையான் தனைச்சார தளராது இருப்பார் தாம் தாமே

மணிவாசகர் இந்த பாடலில், ஐம்பொறிகளின் பிடியில் நாம் அகப்படலாகாது என்று கூறிய பின்னர், எவ்வாறு அப்படி இருப்பது என்பதையும் நமக்கு கற்றுக் கொடுக்கின்றார். பெருமானின் திருவடிகளை ஓயாது நினைக்கத் தொடங்கினால், ஐந்து பொறிகளும் அந்த பணியில் ஈடுபடும் என்று நமக்கு உணர்த்துகின்றார். உலகத்தில் இந்த உடலுடன் வாழ்கின்ற நம்மை அலைக்கழிக்கக்கூடிய நிகழ்ச்சிகளும் பொருட்களும் நமது வாழ்வில் எதிர்பட்டாலும், அவற்றைப் பற்றிய கவலைகள் ஏதும் இல்லாமல் நாம் இருந்தால், அவை வந்த வழியே போய்விடும் என்றும், அவ்வாறு நாம் நம்மை மாற்றிக்கொண்டால் நமக்கு அருள்புரிவதற்காக இந்த உலகக்கு வந்த இறைவன் நமக்கு நிச்சயம் அருள்புரிவான் என்று ஐம்புலன்களை இறை வழிபாட்டில் ஈடுபடுத்தும் வழியையும் அதனால் ஏற்படும் பலனையும் மணிவாசகர் உணர்த்தும் பாடல் இது.

பொழிப்புரை

திருநீற்றினை உடலில் அணிந்தவனும், நிமிர்ந்து பொலிவுடன் காணப்படும் சடையை உடையவனும், இடபத்தினை வாகனமாக உடையவனும், நம்மை ஆள்பவனும், நமது புலன்களை நாம் அடக்குவதற்கு உதவி செய்து, அந்த ஐம்புலன்களும் தன்னைப் பற்றுமாறு செய்பவனும் ஆகிய பெருமானை, மயிலாடுதுறை தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானை போற்றும் அடியார்கள், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவார்கள், அவர்கள் இந்த உலகத்தில் மறுபடியும் வாழவேண்டிய அவசியம் ஏற்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.