அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும் அமருலகம்
தம்மடைந்தார்க்கு ஆட்சி போலும்
நல்லமும் நல்லூரும் மேயார் போலும் நள்ளாறு நாளும்
பிரியார் போலும்
முல்லை முகை நகையாள் பாகர் போலும் முன்னமே
தோன்றி முளைத்தார் போலும்
தில்லை நடமாடும் தேவர் போலும் திருச்சாய்க்காட்டு
இனிது உறையும் செல்வர் தாமே
விளக்கம்
முன்னமே தோன்றி முளைத்தார் என்று, பெருமான் எவராலும் தோற்றுவிக்கப்படவில்லை என்பதையும், அனைத்து உயிர்களுக்கும் முன்னமே தோன்றியவர் சிவபெருமான் என்பதையும் அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.
பொழிப்புரை
தனது அடியார்களின் அல்லல்களை அறுக்கும் சிவபெருமான், தனது திருவடிகளைப் பற்றிக்கொள்ளும் அடியார்கள் விண்ணுலகம் ஆள்வதற்கான வாய்ப்பினை அளிக்கின்றார். நல்லம் மற்றும் நல்லூர் ஆகிய தலங்களில் பொருந்தி உறையும் சிவபெருமான் நள்ளாறு தலத்தினை என்றும் பிரியாமல் இருக்கின்றார். முல்லை அரும்பு போன்று வெண்மையான அழகான பற்களை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்ற சிவபெருமான், அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே, தான்தோன்றியாக முளைத்தவர் ஆவார். தில்லைச் சிற்றம்பலத்தில் நடமாடும் தேவராகிய சிவபெருமான் சாய்க்காடு தலத்தில், மிகுந்த விருப்பத்துடன் உறைகின்றார். இத்தகைய பண்புகளை உடைய சிவபெருமான், வேறு எவரிடமும் இல்லாத செல்வமாகிய முக்திச் செல்வத்தை உடையவர் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

