பாடல் 5:
மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே
விளக்கம்:
இறைவனின் அழகினை மூன்றாவது பாடலில் பாடிய சம்பந்தர், இங்கே இறைவியின் அழகை நினைத்து மயில் போன்ற சாயல் உடைய மாது என்று கூறுகின்றார். எந்த செயலையும் தொடர்ந்து செய்தலை பயிலுதல் என்று கூறுவார்கள். நாம் நமது வாழ்நாள் முழுவதும் ஏதேனும் கற்றுக் கொண்டே இருப்பதால் தான் கல்வி [பயிலுதல் என்று சொல்கின்றனர். எயில்=கோட்டை; சாய=மடிந்து விழ;
பொழிப்புரை:
மயில் போன்று அழகினை உடைய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனும். வலிமையான மூன்று கோட்டைகளை உடைய திரிபுரத்து அரக்கர்கள் மடிந்து விழும் வண்ணம் அந்த மூன்று கோட்டைகளையும் எரித்த எமது தலைவனும் ஆகிய இறைவன் குயில்கள் நிறைந்து வாழும் சோலைகள் உடைய கோலக்கா தலத்தில் உறைகின்றான். அவனை இடைவிடாது தியானம் செய்து வணங்க, நமது பாவங்கள் முற்றிலும் அழிந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

இளைஞா் விஷமருந்தி தற்கொலை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


