ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

95. காரைகள் கூகை முல்லை - பாடல் 9

சிவபெருமான் உறையும்

News image
Updated On :18 மே 2018, 9:12 pm

பாடல் 9:

    நிறவுரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்ற தொகுநீர்மை
        சீர்மை நினையார்
    அறவுறு வேத நாவன் அயனோடு மாலும் அறியாத
        அண்ணல் நகர் தான்
    புறவிரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை
        கொன்றை துன்று பொதுளி
    நறவிரி போது தாது புது வாசம் நாறும் நனிபள்ளி
       போலும் நமர்காள்

விளக்கம்:

நீர்மை=இயல்பு, குணம், தன்மை; சீர்மை=சிறப்பு; அறவுறு வேதம்=அறம் பொருந்திய வேதங்கள்; புற=புறவம், தோட்டம்; துன்று=அடர்ந்து; பொதுளி=நெருங்கி; 

பொழிப்புரை:

செம்மை நிறமும் நெருப்பும் ஒன்று சேர்ந்து உயர்ந்து தங்களிடையே நின்ற உருவத்தின் தன்மையையும் பெருமையையும் உணர முடியாத வண்ணம், அறங்களை உணர்த்தும் வேதங்களை ஓதும் பிரமன் மற்றும் திருமால் ஆகியோரின் எதிரே நின்ற சிவபெருமான் உறையும் நகரம் நனிபள்ளி; முல்லை, மௌவல், குளிர்ந்த அசோக மலர்கள், புன்னை, பெருமான் புனையும் கொன்றை ஆகிய மலர் கொடிகளும் செடிகளும் அடர்ந்தும் நெருங்கியும் வளர்வதால் அந்த மலர்கள் விரிந்து மகரந்தங்களை உதிர்த்து புதிய நறுமணங்களை பரப்பும் சோலைகள் நிறைந்த தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.