பாடல் 5:
பொன்னினார் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூண நூல் புரள
மின்னினார் உருவின் மிளிர்வதோர் அரவம் மேவு வெண்ணீறு மெய் பூசித்
துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளித்
தொன்மையார் தோற்றமும் கேடும்
பன்னினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
விளக்கம்:
கேடு=அழித்தல்; பன்னுதல்=மீண்டும் மீண்டும் ஒரே செயலைச் செய்தல். ஒருமுறை பேசிய சொற்களையே மீண்டும் மீண்டும் பேசுதலை பன்னி பன்னி பேசுதல் என்று கூறுவார்கள். வடம்=மாலை; பொறி=புள்ளிகள், இங்கே புள்ளிகள் உடைய வண்டு; துன்னிய=நெருங்கிய, தன்னை வந்தடைந்த;
பொழிப்புரை:
பொன் போன்றதும் புள்ளிகள் உடைய வண்டுகள் இடைவிடாது மொய்ப்பதும் ஆகிய கொன்றை மாலையை மார்பில் அணிந்தவரும், முப்புரி நூல் அணிந்தவரும் ஆகிய பெருமான் மின்னல் போன்று ஒளிவீசும் தனது திருமேனியில் பாம்பினையும் தரித்து தனது உடல் முழுவதும் வெண்ணீறு பூசியவராக காணப்படுகின்றார். அவர் தன்னை வந்தடைந்த சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறத்தின் பொருளை உபதேசம் செய்தவர். பண்டைய காலம் தொட்டே, எத்தனை முறை என்று நாம் எவரும் கணிக்க முடியாத வண்ணம், உலகினை மீண்டும் மீண்டும் தோற்றுவித்தும் அழித்தும், உயிர்கள் தங்களது மலத்தினைக் கழித்துக் கொள்ளும் வாய்ப்பினை தொடர்ந்து அளித்து வருகின்றார். அத்தகைய பெருமான் பந்தணைநல்லூர் தலத்தில் பசுபதியாக வீற்றிருக்கின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


