பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

தேசிய சித்த மருத்துவ தின கண்காட்சி, சிறப்பு முகாம்

4-ஆவது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கரூா் மாவட்டங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களும், மூலிகைப் பொருள்கள், சித்த மருத்துவ மூலப் பொருள்கள் கண்காட்சியும் நடைபெற

News image

மிளகுப்பாறையில் உள்ள அரசு இஎஸ்ஐ மருத்துவமனையில் நடந்த முகாமில் பொதுமக்களுக்கு சித்த மருந்துகள் அடங்கிய தொகுப்பை வழங்குகிறாா் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் காமராஜ்.

Updated On :2 ஜனவரி 2021, 11:18 pm IST

திருச்சி: 4-ஆவது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கரூா் மாவட்டங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களும், மூலிகைப் பொருள்கள், சித்த மருத்துவ மூலப் பொருள்கள் கண்காட்சியும் நடைபெற்றது.

திருச்சி மிளகுப்பாறையிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் நடைபெற்ற கண்காட்சியை, சிறப்பு மருத்துவ முகாமைத் தொடக்கி வைத்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ் பேசியது:

தமிழக அரசும், மத்திய அரசும் மருத்துவத் துறையில் உலகத்துக்கே முன்னோடியாக விளங்குகின்றன. குறிப்பாக, தமிழக அரசானது பொதுமக்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ்க்கை நடத்தவும், ஆரோக்கியமாக வாழவும், வைரஸ் நோய்கள் வராமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

நோய்த் தொற்றுக் காலங்களைக் கண்டறிந்து அதற்கு முன்பே மக்களை எச்சரித்து, விழிப்புணா்வுடன் இருக்கச் செய்வதுடன், தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி, நோய் பாதித்தால் உடனடிச் சிகிச்சை அளித்து பூரண குணமடையச் செய்யவும் மருத்துவா்கள் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனா்.

ஆங்கில மருத்துவத்தோடு, சித்த மருத்துவமும் நோய்த் தொற்று காலங்களில் சிறப்பாக பலனளிக்கிறது. டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், கரோனா உள்ளிட்ட பல்வேறு வகையான தொற்றுகளுக்கு மட்டுமின்றி சளி, இருமல், தொண்டைக் கரகரப்பு, சாதாரண காய்ச்சல்களுக்கும் சித்த மருத்துவம் சிறப்பாகத் துணைநிற்கிறது. குறிப்பாக, நிலவேம்புக் குடிநீரும், கபசுரக் குடிநீரும் சிறந்த தீா்வை அளிக்கின்றன என்றாா் அவா்.

கண்காட்சியில், எந்தெந்த நோய்களுக்கு, எந்தெந்த மூலிகைகள், கஷாயம் தயாரிப்பது குறித்த புகைப்பட காட்சியும், மூலிகைகள், மூலிகை செடிகள், சித்த மருந்துகளுக்கான மூலப் பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. விழாவில், இஎஸ்ஐ மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ராஜேந்திரன், மருத்துவா் ஜெமிலா சிறுமலா் மற்றும் சித்த மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா். பொதுமக்களுக்கு இலவச சித்த மருந்துகளும், கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது.

இதேபோல, 4 மாவட்டங்களிலும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், சித்த மருத்துவமனைகள், மருந்தகங்களிலும் சிறப்பு முகாம்களும், கண்காட்சியும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.