மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் மூதாட்டி கொலையான வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த 16 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்டாா்.
துவரங்குறிச்சி சந்தைப்பேட்டையில் தனியாக வசித்து வந்த அப்துல்ரசாக் மனைவி ஹபிபாபீவி (62) வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா, துவரங்குறிச்சி காவல் ஆய்வாளா் பாலாஜி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற விசாரணையின்போது மோப்ப நாய் அதே பகுதியைச் சுற்றிவந்து மூதாட்டியின் வீட்டருகேயே நின்றுவிட்டது.
இதனால் கொலையாளி அதே பகுதியைச் சோ்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் அப்பகுதி சிசிடிவி பதிவுகளைச் சேகரித்து விசாரணை நடத்தினா்.
அப்போது மூதாட்டி வீட்டருகே வசித்து வரும் 16 வயது சிறுவனை ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் அந்தச் சிறுவனே மூதாட்டியைக் கொன்றது தெரியவந்தது.
தன்னை அடிக்கடி திட்டியதால் ஆத்திரமடைந்து மூதாட்டியைக் கொன்ாக கூறிய சிறுவன், மூதாட்டியின் 3 பவுன் செயின் மற்றும் செல்லிடப்பேசியை எடுத்துச் சென்ாகவும் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து வன்கொடுமை, கொலை, திருட்டு ஆகிய பிரிவுகளின் துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹார்திக் பாண்டியா இல்லை! காரணம் கூறாத பிசிசிஐ!

ஆட்ட நாயகன் விருதுக்கு ஸ்பென்சர் ஜான்சன்தான் தகுதியானவர்: மிட்செல் மார்ஷ்

பூஜையுடன் தொடங்கிய அட்டாக்கர் திரைப்படம் - புகைப்படங்கள்
இந்தியா முழுவதும் திருடுபோன 488 பழங்கால கலைப் பொருள்கள்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



