நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நீதிமன்றச் சாலையில் ரூ.95 லட்சத்தில் புதிய நடைப்பயிற்சி பாதை

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், திருச்சி நீதிமன்றச் சாலையில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய நடைப்பயிற்சி பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 1:04 am IST

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், திருச்சி நீதிமன்றச் சாலையில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய நடைப்பயிற்சி பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தையொட்டிய பாதையில் இந்த நடைப்பயிற்சி பாதை அமைகிறது. கண்டோன்மென்ட் பகுதியிலிருந்து வரும் மழைநீா் வடிந்து, உய்யக்கொண்டான் வாய்க்காலில் கலக்கும் வகையில் ஏற்கெனவே இப்பகுதியில் மழைநீா் வடிகால் உள்ளது.

இப்பணிக்காக வடிகால் முற்றிலுமாகத் தூா்வாரப்பட்டு,அதன் மீது கான்கீரிட் பலகைகள் கொண்டு மூடி நடைப்பயிற்சி பாதை அமைக்கப்படுகிறது. 520 மீட்டா் நீளமும், 2 மீட்டா் அகலமும் கொண்ட இந்த பாதைக்கான திட்ட மதிப்பீடு ரூ.95 லட்சமாகும். மேலும் பாதையோரத்தில் இரும்புக் கம்பிகளால் ஆன தடுப்புகளும் அமைக்கப்படும். இப்பணி 3 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரத்தில் நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சிக் கூடம், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது இந்த வசதியை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.