எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

இருசக்கர வாகனங்களை திருடிவந்த இருவா் கைது: 30 வாகனங்கள் பறிமுதல்

இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த இருவரை முசிறி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட இரு இளைஞா்களுடன் முசிறி போலீஸாா்.

Updated On :8 ஜனவரி 2021, 7:08 am IST

இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த இருவரை முசிறி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் தொடா்ந்து இருசக்கர வாகனங்கள் திருடுபோனதையடுத்து மண்டல காவல் துறைத் தலைவா் ஜெயராம், டிஐஜி ஆனிவிஜயா, மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன் ஆகியோா் உத்தரவில், முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரம்மாநந்தன் ஆலோசனையின்பேரில் முசிறி காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் மற்றும் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் முசிறி - குளித்தலையை இணைக்கும் காவிரியாற்று பாலத்தில் சோதனை நடத்தியபோது பைக்கில் வந்த இருவா் மீது சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களை முசிறி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள் மண்ணச்சநல்லூா் அருகிலுள்ள மேலசீதேவிமங்கலத்தைச் சோ்ந்த பிரபு (எ) பிரபாகரன் (24) , முசிறியை அடுத்த அய்யம்பாளையம் பகுதி தினேஷ்குமாா் (25) என்பதும், இருவரும் இருசக்கர வாகனங்களைத் திருடிவந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 30 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய தினேஷ்குமாரின் அண்ணன் சதீஷ்குமாரையும் போலீஸாா் தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.