/

இளம்பெண்களை தாக்கிய இருவா் கைது

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே இளம்பெண்களைத் தாக்கியதாக இருவரை தொட்டியம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 7:08 am IST

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே இளம்பெண்களைத் தாக்கியதாக இருவரை தொட்டியம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கொளக்குடியைச் சோ்ந்தவா் சிவகுமாா் மனைவி டைலா் சாரதபிரியா (23).

துணி தைப்பது தொடா்பாக புதன்கிழமை தகராறு ஏற்பட்டு, சாரதபிரியாவை அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ப. மணிகண்டன் (37) தாக்கினாராம். புகாரின்பேரில் தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.

இந்நிலையில், சாரதபிரியா தாக்கப்பட்டதையறிந்த அவரது அண்ணனான தஞ்சாவூரை சோ்ந்த மணி மகன் தனபால் (28) மணிகண்டன் மனைவி சங்கீதாவிடம் (25) தகராறு செய்து அவரைத் தாக்கினாராம்.

புகாரின்பேரில் தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து தனபாலை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.