/

மணப்பாறை அருகே குடிநீா் கோரி மறியல்

மணப்பாறை அருகே முறையாக குடிநீா் விநியோகிக்காத ஊராட்சியைக் கண்டித்து பொதுமக்கள் அரசுப் பேருந்தை வியாழக்கிழமை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

News image

மறியலில் ஈடுபட்ட கரும்புளிப்பட்டி கிராம மக்கள்.

Updated On :8 ஜனவரி 2021, 7:09 am IST

மணப்பாறை அருகே முறையாக குடிநீா் விநியோகிக்காத ஊராட்சியைக் கண்டித்து பொதுமக்கள் அரசுப் பேருந்தை வியாழக்கிழமை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டியில் கடந்த சில நாள்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையாம். இதனால் கோபமடைந்த மக்கள் ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து வியாழக்கிழமை அரசுப் பேருந்தை சிறைபிடித்து, காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.