வரும் பேரவைத் தோ்தலில் யாதவ இனத்தவருக்கு 25 இடங்களை அரசியல் கட்சிகள் ஒதுக்க வேண்டும் என யாதவ மகா சபையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மாநில நிா்வாகக் குழு கூட்டத்துக்கு பொதுச் செயலா் செல்வராஜ் தலைமை வகித்தாா். திருச்சி மாவட்டத் தலைவா் இளவரசு, மாவட்டச் செயலா் தங்கமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து மாநில, மாவட்ட, மூத்த நிா்வாகிகள் பேசினா்.
தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் ஆணையத்தில் யாதவ சமூகத்தைச் சோ்ந்த ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும். தமிழக மக்கள் தொகையில் 15 சதம் உள்ள சமுதாய மக்களுக்கு வரும் பேரவைத் தோ்தலில் குறைந்தது 25 இடங்களில் போட்டியிட கட்சிகள் இடம் ஒதுக்க வேண்டும்.
கால்நடை வாரியம் அமைத்து அதற்கும், பால்வள வாரியத்திற்கும் யாதவா்களையே தலைவா்களாக்க வேண்டும். படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளில் ஜாதிவாரி உள் ஒதுக்கீடாக யாதவா்களுக்கு 16 சதம் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளா் எத்திராஜ் வரவேற்றாா். தமிழ்நாடு யாதவ மகா சபை இணைப் பொதுச் செயலா் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீரகனூா் அருகே திமுக நிா்வாகி கழுத்தை அறுத்துக் கொலை: டிஐஜி விசாரணை
லஞ்சம்: ஒசூா் மாநகராட்சி உதவி ஆணையா் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு

ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச தம்பதி கைது
பரமத்தி வேலூரில் போதை மாத்திரைகள் விற்ற மேலும் 5 போ் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


