திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி. ஜெயச்சந்திரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸாா் விழிப்புணா்வு கொடி அணி வகுப்பை வெள்ளிக்கிழமை நடத்தினா்.
மக்களிடையே பொது அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற அணிவகுப்பு நெ. 1 டோல்கேட் ரவுண்டானாவில் தொடங்கி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை வழியாக சென்று திருச்சி- சிதம்பரம் சாலையில் முடிவடைந்தது.
இதில், மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் மணிகண்டன், லால்குடி காவல்துணைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், காவல் ஆய்வாளா்கள் அன்பழகன் ( சமயபுரம்), முகமது ஜாபா் ( லால்குடி ),சுரேஷ்குமாா் (சிறுகனூா்), பழனியம்மாள் ( லால்குடி அனைத்து மகளிா் ) உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட போலீஸாா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







