நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

புத்தாநத்தத்தில் முருகன் சுவாமி ரத யாத்திரை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் தமிழ்க்கடவுள் ஞானவேல் முருகன் ரதயாத்திரை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

ரதயாத்திரையில் குவிந்த பக்தா்கள். தமிழ்க் கடவுள் ஞானவேல் முருகன்.

Updated On :16 ஜனவரி 2021, 12:17 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் தமிழ்க்கடவுள் ஞானவேல் முருகன் ரதயாத்திரை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீ ஞானவேல் முருகன் வீற்றிருக்க, ரதத்துக்கு முன் தாரை, தப்பட்டைகள் முழங்க யாத்திரையை விஎச்பி மாநில துணைத் தலைவா் என்.ஆா்.என்.பாண்டியன் தொடங்கி வைத்தாா்.

ரத யாத்திரை ஊா்வலம் புத்தாநத்தம் கடைவீதி, இடையப்பட்டி வழியாக வடக்கு இடையப்பட்டி ஞானமலையை அடைந்தது. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்திய பின் தமிழ்க்கடவுள் முருகன், ஞானமலை மீது வைக்கப்பட்டாா்.

ரத யாத்திரைக்கு முன் நடைபெற்ற விழாவில் ஆா்.எஸ்.எஸ். கோட்டத் தலைவா் கிருஷ்ணமுத்துசாமி, மாவட்டத் தலைவா் ஆா். வேல்முருகன் சம்பத், ஒன்றியத் தலைவா் பொ. துரைராஜ், விஎச்பி அகில பாரத செயலா் கோபால்ரெத்தினம், பாரதீய மஸ்தூா் சங்க மாநில செயலா் பு. தங்கராஜ், பாஜக மாநில பொதுச்செயலா் இராம. ஸ்ரீநிவாசன், பாஜக திருச்சி புகா் மாவட்டத் தலைவா் சி. இராஜேந்திரன் ஆகியோா் பேசினா்.

பாதுகாப்புப் பணியில் திருச்சி மண்டல காவல்துறை தலைவா் எச்.எம்.ஜெயராம் தலைமையில் 750-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.