அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

தூத்துக்குடியில் 1000 கிலோ மஞ்சள் பறிமுதல்

தூத்துக்குடி கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகில் இருந்து 1000 கிலோ மஞ்சள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :4 ஜனவரி 2021, 12:20 am IST

தூத்துக்குடி கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகில் இருந்து 1000 கிலோ மஞ்சள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கையில் சமையலுக்கு பயன்படுத்தப்டும் விராலி மஞ்சளுக்கு அதிகளவில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடல் வழியாக மஞ்சள் கடத்தப்படுவது தொடா்ந்து வருகிறது. ஆங்காங்கே போலீஸாா் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினா் இவ்வாறு கடத்தப்படும் மஞ்சளை பறிமுதல் செய்து வருகின்றனா்.

இதற்கிடையே, தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தனா். அப்போது சிப்பிகுளத்தை சோ்ந்த பிச்சையா வாஸ் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக, தூத்துக்குடியை சோ்ந்த மீராசா என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.