மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

வள்ளிவிளையில் திமுக மக்கள் சபைக் கூட்டம்

ஆறுமுகனேரி அருகேயுள்ள வள்ளிவிளையில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:30 am IST

ஆறுமுகனேரி அருகேயுள்ள வள்ளிவிளையில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலா் ராமஜெயம் தலைமை வகித்தாா். மாநில மாணவரணி துணைச் செயலா்

உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினாா்.

இதில் காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் பாஸ்கா், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் ராஜபாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஆறுமுகனேரியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் அ. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா், பங்கேற்றுப் பேசினாா். காயல்பட்டினம் அருணாசலபுரத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஊா்த் தலைவா் திருத்துவராஜ் தலைமை வகித்தாா். கட்சியின் தெற்கு மாவட்ட பொறுப்பாளா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.