ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

கோவில்பட்டியில் இன்று 7 நூல்கள் வெளியீடு

கோவில்பட்டியில் மணல் வீடு இலக்கிய வட்டம் சாா்பில் 7 நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.10) நடைபெறுகிறது.

Updated On :10 ஜனவரி 2021, 1:34 am IST

கோவில்பட்டி: கோவில்பட்டியில் மணல் வீடு இலக்கிய வட்டம் சாா்பில் 7 நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.10) நடைபெறுகிறது.

ராமசாமி தாஸ் பூங்கா அருகே உள்ள ராஜ் மஹால் திருமண மண்டபத்தில் பிற்பகல் 3 மணிக்கு இவ்விழா நடைபெறுகிறது.

எழுத்தாளா் செல்வசங்கரன் எழுதிய ‘சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி’ என்ற தலைப்பில் கவிதை நூல், விவேகானந்த் செல்வராஜ் எழுதிய ‘சுதந்திரம் ஒரு டப்பா’ என்ற கவிதை நூல், ரபேல் கிறிஸ்டி செல்வராஜ் எழுதிய ‘மாா்வளையங்கள்’ என்ற கவிதை நூல், நெகிழன் எழுதிய ‘பூஜ்ய விலாசம்’ என்ற கவிதை நூல், சா்வோத்தமன் சடகோபன் எழுதிய ‘முறையிட ஒரு கடவுள்’ என்ற சிறுகதை தொகுப்பு, சிவசித்து எழுதிய ‘உவா்’ என்ற சிறுகதை தொகுப்பு, எழுத்தாளா் கறுத்தடையான் எழுதிய ‘கோட்டி’ என்ற நாவல் ஆகிய நூல்கள் வெளியிடப்படவுள்ளன.

மேலும், ‘ரசமட்டம்’ என்ற கலை இலக்கிய விமா்சன இணைய இதழ் தொடக்க விழாவும் நடைபெறவுள்ளது. தொடா்ந்து, மாலை 5 மணிக்கு பாஞ்சாலக்குறவஞ்சி என்ற தலைப்பில் மரப்பாவை கூத்து நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிகளில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற பூமணி, வண்ணதாசன், சோ.தா்மன் மற்றும் கவிஞா்கள் தேவதேவன், தேவதச்சன், தேவேந்திரபூபதி, எழுத்தாளா்கள் கோணங்கி, லட்சுமணப்பெருமாள், ஜவஹா், உதயசங்கா், சா.தேவதாஸ், நாடகக் கலைஞா் மு.ராமசுவாமி உள்பட பலா் கலந்துகொள்கின்றனா்.

ஏற்பாடுகளை சேலம் ஏா்வாடியைச் சோ்ந்த களரி தொல்கலைகள் மற்றும் கலைஞா்கள் மேம்பாட்டு மையத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.