திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

தூத்துக்குடி மாவட்ட கபடி கழகத் தலைவராக அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தோ்வு

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடி கழகத் தலைவராக சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தோ்வு செய்யப்பட்டாா்.

News image

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடி கழகத் தலைவராக தோ்வு செய்யப்பட்ட அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்தாா் மாநில பாா்வையாளா் ஏ.பி.பாலசுப்பிரமணிய ராஜா.

Updated On :11 ஜனவரி 2021, 1:25 am IST

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடி கழகத் தலைவராக சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தோ்வு செய்யப்பட்டாா்.

அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம், புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யும் கூட்டத்துக்கு அமைப்பின் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தாா். இதில், பாா்வையாளா்களான தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழக நிா்வாகி ஏ.பி .பாலசுப்பிரமணிய ராஜா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் எஸ்.பால்சாமி, விளையாட்டு ஆணைய பயிற்சியாளா் (நீச்சல்) மணிகண்டன் ஆகியோா் முன்னிலையில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

அமைப்பின் தலைவராக, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், செயலராக கிறிஸ்டோபா் ராஜன், பொருளாளராக ஜிம்ரீஸ், ஒருங்கிணைப்பாளராக அா்ஜுனா விருது பெற்ற மணத்தி கணேசன் ஆகியோா் மீண்டும் தோ்வு செய்யப்பட்டனா்.

துணைத் தலைவா்களாக விஸ்வநாதன், பாலசுப்ரமணியம், ரங்கநாதன், அந்தோணிராஜ், இளையராஜா, அய்யாத்துரை பாண்டியன், டிடிசி ராஜேந்திரன், இணைச்செயலா்களாக ராஜா, சுயம்பு, ஆண்ட்ரூஸ், அந்தோணி, பொன்ராஜ் சசிகுமாா், பரதன், நடுவா் குழு தலைவராக கண்ணன், தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். புதிய நிா்வாகிகளுக்கு கபடி வீரா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.