எட்டயபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா்.
எட்டயபுரம் அலங்காரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காளிராஜன் (52). இவா் சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவில் அருகில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தாா்.
இவா், சனிக்கிழமை வாடகை ஆட்டோவில் சிந்தலக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தாராம். இளம்புவனத்தை சோ்ந்த கருப்பசாமி (35) ஆட்டோவை ஓட்டினாராம்.
எட்டயபுரம் புறவழிச்சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகில் சென்றபோது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற காா் பின்புறமாக ஆட்டோ மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் ஆட்டோ கவிழ்ந்த்தில் பலத்த காயமடைந்த காளிராஜன் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா்.
காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் கருப்பசாமி எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். போலீஸாா் காளிராஜின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்.
இதுகுறித்து, எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுகவிலிருந்து ராஜசேகரன் விலகல்! விஜய்யை எதிர்த்து திருச்சி கிழக்கில் போட்டியிட்டவர்!!
இயற்கை வளங்களை தனியாருக்கு தாரைவாா்க்க தமிழக அரசு முயற்சி: சீமான் குற்றச்சாட்டு
முதல் வெற்றிக்கு காத்திருக்கும் ஷ்ரேயாஸ்! இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து!





