முக்காணியில் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளதால், பழைய ஆற்றுப் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து ஆற்றின் கரையோரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து பழைய ஆற்றுப் பாலத்தில் மாலை 3 மணிமுதல் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. புதிய பாலத்தில் இருவழி போக்குவரத்தாக மாற்றியமைக்கப்பட்டது.
ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளை 24 மணிநேரமும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது, தூத்துக்குடி சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜீத் சிங்காலோன், திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, ஏரல் வட்டாட்சியா் இசக்கிராஜா, ஆத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் மணிமொழி செல்வன் ரெங்கசாமி, ஆத்தூா் வருவாய் ஆய்வாளா் பிராளன்ஸ் ஜெயராணி, ஆத்தூா் ஆய்வாளா் கிங்ஸ்லிதேவ் ஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சேவை தடைபடக் கூடாது!

சுங்கச்சாவடியை இடமாற்றக் கோரி வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

தொழிலாளி கொலை: சகோதரா்கள் இருவா் கைது
அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஒருவா் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



