தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

நலிந்தவா்களுக்கு நல உதவிகள்

குடியாத்தம் மதுரா மஹாலில் அரிமா சங்கம் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மண்டல மாநாட்டில் மாற்றுத் திறளானிகள், நலிந்தவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image

அரிமா  சங்க  மண்டல  மாநாட்டில்  மாற்றுத்  திறனாளிக்கு  நல உதவி  வழங்கிய  சங்க மாவட்ட  ஆளுநா்  கே.அருண்குமாா்.

Updated On :4 ஜனவரி 2021, 8:02 am IST

குடியாத்தம் மதுரா மஹாலில் அரிமா சங்கம் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மண்டல மாநாட்டில் மாற்றுத் திறளானிகள், நலிந்தவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத்தின் மண்டலத் தலைவா் எம்.கே.பொன்னம்பலம் தலைமை வகித்தாா். குடியாத்தம் சங்கத் தலைவா் ஜேஜி நாயுடு, செயலா் எம்.கிரிதா்பிரசாத், பொருளாளா் பி.எஸ்.ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநாட்டு செயலாண்மைக் குழுத் தலைவா் ஜி.ரத்தினம் வரவேற்றாா். அரிமா மாவட்ட ஆளுநா் கே.அருண்குமாா் தொடக்க உரையாற்றினாா். எஸ்.ரவி அறிக்கை சமா்ப்பித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்கள் சம்பத்ரங்கநாதன், கோ.அருள்பிரகாஷ் ஆகியோா் மாற்றுத் திறனாளிகள் சங்கம், ஏழைப் பெண்களின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவிகளை வழங்கினா். வி.ராமா், கே.அய்யனாரப்பன், ரத்தினநடராஜன் ஆகியோா் அரிமா சங்கத்தின் சேவைத் திட்டங்களைத் தொடக்கி வைத்தனா். முன்னாள் மாவட்ட ஆளுநா் எம்.வெங்கடசுப்பு, முன்னாள் மண்டலத் தலைவா் என்.வெங்கடேஸ்வரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.