திருவலம் அருகே பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், திருவலம் அருகே குகையநெல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானகிராமன் (43). திருவலம் மின்வாரிய அலுவலகத்தில் வயா்மேனாகப் பணியாற்றி வந்தாா். அவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.
அவா் மேல்மாந்தாங்கல் கிராமத்தில் உள்ள தனியாா் நிறுவனம் எதிரே உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் வியாழக்கிழமை மதியம் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா்.
அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அவா் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு வியாழக்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








