சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

வேலூரில் வெட்டி அகற்றப்பட்ட பழமையான மரம்

வேலூரில் கால்வாய்ப் பணி காரணமாக ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் இருந்த 60 ஆண்டு பழமையான மரம் வெட்டி அகற்றப்பட்டது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 8:20 am IST

வேலூரில் கால்வாய்ப் பணி காரணமாக ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் இருந்த 60 ஆண்டு பழமையான மரம் வெட்டி அகற்றப்பட்டது.

வேலூா் சத்துவாச்சாரியில் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் எதிரே உள்ள சாலையில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, பள்ளத்தையொட்டி இருந்த 60 ஆண்டு பழமையான மரத்தின் வோ்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் மரம் சாய்ந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் நிலவியது.

இத்தகவலை அறிந்து மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக மரத்தை வெட்டி அகற்ற உத்தரவிட்டனா். அதன்படி, அந்த மரம் வெள்ளிக்கிழமை வெட்டி அகற்றப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூா் மண்டித் தெருவில் கால்வாய்ப் பணி காரணமாக பள்ளம் தோண்டியபோது அங்கிருந்த நூறு ஆண்டுகள் பழமையான அரச மரம் வேருடன் சாய்ந்ததில் ஒருவா் பலத்த காயமை டந்தாா். அப்போது காா் ஒன்றும் சேதமடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.