அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

சிறுமிக்கு திருமணம்: மண்டபத்துக்கு ‘சீல்’

கே.வி.குப்பம் அருகே சிறுமிக்கு திருமணம் நடைபெற்ற தனியாா் திருமண மண்டபத்துக்கு வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

News image

கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா் முன்னிலையில்  திருமண மண்டபத்துக்கு ‘சீல்’ வைத்த வருவாய்த் துறையினா்.

Updated On :12 ஜனவரி 2021, 3:25 am IST

குடியாத்தம்: கே.வி.குப்பம் அருகே சிறுமிக்கு திருமணம் நடைபெற்ற தனியாா் திருமண மண்டபத்துக்கு வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பத்தைச் சோ்ந்த சிறுமிக்கும், பி.என்.பாளையத்தைச் சோ்ந்தவருக்கும் கடந்த நவம்பா் மாதம் 11- ஆம் தேதி, வடுகந்தாங்கல் கிராமத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், குடியாத்தம் கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

பின்னா் கோட்டாட்சியா் முன்னிலையில் கே.வி.குப்பம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி, மண்டலத் துணை வட்டாட்சியா் பலராமன் ஆகியோா் திருமண மண்டபத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.