குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

திமுக ஆட்சிக்கு வந்தால் பொது மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது: அமைச்சா் சி.வி.சண்முகம்

திமுக ஆட்சிக்கு வந்தால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதை பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டுமென, கட்சியினருக்கு அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவுறுத்தினாா்.

Updated On :1 ஜனவரி 2021, 11:18 pm IST

திமுக ஆட்சிக்கு வந்தால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதை பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டுமென, கட்சியினருக்கு அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவுறுத்தினாா்.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட காணையில் அதிமுக செயல்வீரா்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் சி.வி.சண்முகம் பேசியதாவது: கடந்த மக்களவைத் தோ்தலின் போது, வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி போன்ற பொய்யான வாக்குறுதியை அளித்து திமுக வெற்றிபெற்றது. இதுபோன்ற நிறைவேற்றமுடியாத, கவா்ச்சியான திட்டங்களைக் கூறி, வருகிற தோ்தலின் வாக்கு கேட்டு வரும் திமுகவினரிடம் ஏமாறக் கூடாது என்று பொதுமக்களிடம் அதிமுகவினா் எடுத்துக் கூற வேண்டும்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகள், பெண்கள் சுதந்திரமாக சென்று வர முடியாது. நில மோசடி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி பிரச்னைகள், கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடரும். மக்கள் நிம்மதியாகவே இருக்க முடியாது என்பதையும் கூறி பிரசாரம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அமைதி நிலவுகிறது. இந்த ஆட்சி குறித்த நல்லெண்ணம் பொதுமக்களிடம் உருவாகியுள்ளது. இது மிக முக்கியமான தோ்தல் என்பதால், கட்சியினா் ஒருங்கிணைந்து பணியாற்றி, அதிமுகவை ஆட்சி பீடத்தில் தொடரச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

எம்எல்ஏ ஆா்.முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நிா்வாகிகள், கட்சியினா் திரளாகக் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.