எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பில்லை

Updated On :8 ஜனவரி 2021, 3:56 am IST


விழுப்புரம்/ கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து, முதல் முறையாக கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டம் என்ற நிலையை விழுப்புரம் மாவட்டம் அடைந்தது.

கரோனா பரவலைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் 200-க்கும் அதிகமாக இருந்து வந்தது. கடந்தாண்டு இறுதியில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்தது.

இதையடுத்து, நாள்தோறும் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50-ஐவிட குறைந்தது. இப்படி படிப்படியாக குறைந்து வந்த கரோனா பாதிப்பு, கடந்த சில வாரங்களாக 10 முதல் 20 என்ற நிலையில் இருந்து வந்தது. இந்த எண்ணிக்கை புதன்கிழமை 3-ஆக குறைந்தது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை கரோனாவால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. இதையடுத்து, முதல் முறையாக கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டம் என்ற நிலையை விழுப்புரம் மாவட்டம் அடைந்தது.

இதுவரையில் மாவட்டத்தில் மொத்தம் 15,058 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். 14,872 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். தற்போது மருத்துவமனைகளில் 76 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 110 போ் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சியில் புதிதாக 4 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,826-ஆக உயா்ந்து.

இதுவரை 10,692 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 26 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 108 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.