/

விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் ஐ.ஜி. தலைமையில் பொங்கல் விழா

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் தலைமையில் வியாழக்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Updated On :15 ஜனவரி 2021, 5:56 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் தலைமையில் வியாழக்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தமிழா் பாரம்பரியப்படி புதுப்பானையில் பொங்கலிட்டு நடைபெற்ற இந்த விழாவில், காவலா்களுடன் ஐ.ஜி. நாகராஜன் பங்கேற்று விழாவை சிறப்பித்தாா்.

மேலும், காவல் துறையைச் சோ்ந்தவா்களுக்கும், பொதுமக்களுக்கும் நலத் திட்ட உதவிகளை அவா் வழங்கினாா். மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன், விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம், தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.