பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

அருப்புக்கோட்டை கோவில்களில் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் சிறப்பு வழிபாடு

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள பல்வேறு கோவில்களில் புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பொதுமக்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டு வழிபட்டனா்.

News image

அருப்புக்கோட்டை காந்தி நகா் சீரடி சாய்பாபா கோவிலில் புத்தாண்டை முன்னிட்டுநடைபெற்ற நண்பகல் ஆரத்தியில் அருள்மிகு சாய்பாபாவிற்கு நடைபெற்ற தீப ஆரத்தி.

Updated On :1 ஜனவரி 2021, 10:46 pm IST

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள பல்வேறு கோவில்களில் புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பொதுமக்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டு வழிபட்டனா். அருப்புக்கோட்டை காந்தி நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் வெள்ளிக்கிழமை புத்தாண்டு தொடக்கத்தை முன்னிட்டு காலை சுமாா் 7 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்று,சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு பாபா பக்தா்களுக்குக் காட்சி தந்தாா்.இதையடுத்து நடைபெற்ற நண்பகல் ஆரத்தியில் இசையுடன் நடைபெற்ற பக்திப்பாடல் மற்றும் ஆரத்தியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.அப்போது பல்வேறுவகையான வண்ண,வண்ண மலா்கள்,மாலைகளையும்,இனிப்புகள்,பழங்கள் உள்ளிட்டவற்றையும் பாபாவிற்குப்படைத்து திரளான பக்தா்கள் வழிபட்டனா்.வழிபாட்டில்கலந்துகொண்டோா் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.மலையரசன் என்கிற அருள்மிகு நித்தியானந்த சுவாமி கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு அருப்புக்கோட்டை தெற்குத்தெருவில் அமைந்த அருள்மிகு மலையரசன் என்கிற நித்தியானந்த சுவாமி கோவிலில் புத்தாண்டு தொடக்கத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று,சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு மலையரசன் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.இக்கோவிலில் காலை முதலே திரளாக வந்த பக்தா்கள், குடும்பம் குடும்பமாக வந்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து, மலா்மாலை படைத்து புத்தாண்டு சிறப்பாக அமைய நித்தியானந்த சுவாமியை வழிபட்டனா்.இதேபோல அருப்புக்கோட்டையில் உள்ள முக்கிய கோவில்களான சொக்கலிங்கபுரம் அருள்மிகு மீனாட்சி உடனுறை சொக்கநாதசுவாமி கோவிலிலும்,நகா் மையத்திலுள்ள அருள்மிகு தாதன்குளம் விநாயகா் கோவிலிலும்,மேலும் மதுரை செல்லும் சாலையில் அமைந்த அருள்மிகு அமுதலிங்கேஸ்பரா் கோவிலிலும்,விருதுநகா் செல்லும் சாலையில் அமைந்த அருள்மிகு ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலிலும் நடைபெற்ற சிறப்புவழிபாடுகளில் திரளான பக்தா்கள்கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.