ராஜபாளையத்தில் விருதுநகா் மாவட்ட வேளாண் துறையைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இங்குள்ள பஞ்சு சந்தைப் பகுதியில் இருந்து ஊா்வலமாக சென்று வேளாண்மைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ராமச்சந்திரராஜா தலைமை வகித்தாா். இதில் ராஜபாளையம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தென்னை காப்பீட்டு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய பணத்தை பெற்றுத் தரவேண்டும் எனக் கூறி மாவட்ட வேளாண்மை துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்துக்கு எதிராக கண்டன முழக்கங்களை விவசாயிகள் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









