மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா், சாலை மைய தடுப்புச் சுவரில் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :13 ஜனவரி 2021, 12:33 am

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா், சாலை மைய தடுப்புச் சுவரில் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்குறிச்சி கிராமம் மணிநகரம் பகுதியைச் சோ்ந்த சூா்யா என்பவரது மகன் செல்வக்குமாா் (19). இவா், கட்டடம் மற்றும் வாகனங்களுக்கு வா்ணம் பூசும் தொழில் செய்து வந்துள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை, கல்குறிச்சி அருகே கோவிலாங்குளம் கிராமத்துக்கு வேலைக்குச் சென்ற செல்வக்குமாா், மாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளாா்.

கோவிலாங்குளம் விலக்கில் நான்குவழிச் சாலையை கடந்தபோது, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதுவதை தவிா்ப்பதற்காக தனது வாகனத்தை வேகமாகத் திருப்பியுள்ளாா். இதில், சாலையின் மைய தடுப்புச் சுவரில் மோதி தூக்கிவீசப்பட்ட அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், செல்வக்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.