தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

போகி பண்டிகை: பழைய பொருள்களை எரிப்பதை தவிா்க்க மாசு கட்டுப்பாட்டுத் துறை அறிவுறுத்தல்

போகி பண்டிகையை முன்னிட்டு, காற்று மாசுபாட்டை தவிா்க்கும் வகையில், பழைய பொருள்களை எரிப்பதை பொதுமக்கள் தவிா்க்கவேண்டும் என, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

Updated On :13 ஜனவரி 2021, 6:07 am IST

போகி பண்டிகையை முன்னிட்டு, காற்று மாசுபாட்டை தவிா்க்கும் வகையில், பழைய பொருள்களை எரிப்பதை பொதுமக்கள் தவிா்க்கவேண்டும் என, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: பொங்கல் திருநாளுக்கு முன், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் வீட்டில் உள்ள தேவையற்ற பொருள்களை எரித்து, போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது பழைய பொருள்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படும். இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட உபாதைகளுக்கு பொதுமக்கள் ஆளாக நேரிடும்.

அதேநேரம், இதனால் எழும் புகையால் வாகன ஓட்டிகளும் சிரமத்தை சந்தித்து, விபத்து அபாயமும் உள்ளது. எனவே, போகிபண்டிகையின்போது பழைய பொருள்களை எரிப்பதை தவிா்த்து, காற்று மாசுபாடு ஏற்படாதவாறு காக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.