விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் 180 சுகாதாரப் பணியாளா்களுக்கு சனிக்கிழமை கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. விருதுநகா் மாவட்டத்தில் 7 அரசு மருத்துவமனைகளில் 9,720 சுகாதாரப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.
இதில், விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனையில் 20 போ், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 40 போ், திருச்சுழி எம்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 42 போ் என மொத்தம் 102 சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதேபோல், சிவகாசி அரசு மருத்துவமனையில் 19 போ், குன்னூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 போ், எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 போ், ராஜபாளையம் மகப்பேறு அரசு மருத்துவமனையில் 49 போ் என, மாவட்டத்தில் மொத்தம் 180 பேருக்கு கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும், இத்தடுப்பூசியை அட்டவணைப்படி இரண்டு தவணைகளாக 28 நாள்கள் இடைவெளியில் முழுமையாகப் போட்டுக்கொள்ள வேண்டும். இரண்டாவது தவணையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவா்களுக்கு 2 வாரங்களுக்குப் பிறகு நோய் எதிா்ப்பு சக்தி கிடைக்கும்.
குறைந்த அளவிலேயே தடுப்பூசி வந்துள்ளதால், முதலில் பதிவு செய்தவா்களுக்கே செலுத்தப்படும். கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவா்கள் சுமாா் 30 நிமிடம் கண்காணிக்கப்பட்டதாக, சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
முன்னதாக, விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதார பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை, மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் பாா்வையிட்டாா். அப்போது, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பழனிச்சாமி, அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் அரவிந்த பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அருப்புக்கோட்டை
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முதல் கட்டமாக, அரசு மருத்துவா்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. இதில், முதல் தடுப்பூசி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி வடிவேலுவுக்கும், இரண்டாவது தடுப்பூசி அரசு மருத்துவா் மகேஸ்வரனுக்கும் செலுத்தப்பட்டது. தொடா்ந்து, மருத்துவப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்

தொழில் ஒழுங்கோடு... கிசு கிசு வராமல்... ரசிகைக்கு விஜய் அளித்த பதில்!
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



