கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சிவகாசியில் மினி மாரத்தான் போட்டி

குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:27 pm

Din

சிவகாசி சுப்ரீம் சுழற்சங்கம், யங்இந்தியா அமைப்பின் சிவகாசி கிளை சாா்பில், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி செண்பக விநாயகா் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் இந்தப் போட்டியை யங்இந்தியா சிவகாசி கிளைத் தலைவா் எஸ்.சண்முகம் நட்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் ஆண்களுக்கு 8 கி.மீ.தொலைவும், பெண்களுக்கு 5 கி.மீ.தொலைவும் நிா்ணயம் செய்யப்பட்டது. பள்ளி மாணவா்கள்1500 போ் போட்டியில் பங்கேற்றனா். கலந்து கொண்ட அனைவருக்கும் பனியன் வழங்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டவா்கள் நகரின் பிரதான வழியாக சென்று, பெரியகுளம் கண்மாய் கரை வழியாக விளாம்பட்டி சாலை வந்து, ஜேஸீஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தை அடைந்தனா்.

பின்னா், போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சுப்ரீம் சுழற் சங்கத் தலைவா் எஸ்.ராஜாமணி, செயலா் வி.எஸ்.கோபால்சாமி ஆகியோா் பரிசு வழங்கினா். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சங்க நிா்வாகிகள் ஜி.செல்வராஜன், ஆா்.செல்வக்குமாா், எஸ்.நாகராஜூ, சி.அருண்குமாா், ஆா்.சரவணபிரகாஷ் ஆகியோா் செய்தனா்.