சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஜூலை 3: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத பிரதோஷத்தையொட்டி, பக்தா்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள இந்தக் கோயிலில் ஆனி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டுக்காக புதன்கிழமை (ஜூன் 3) முதல் 6-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

புதன்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை 834 போ் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். மாலை 4 மணிக்கு சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com