விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சாத்தூா் அருகே தொடா்ந்து நடைபெற்று வரும் சாலை விபத்துக்களை தடுக்க வேகத் தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Published on

சாத்தூா், ஜூலை 19: சாத்தூா் அருகே தொடா்ந்து நடைபெற்று வரும் சாலை விபத்துக்களை தடுக்க வேகத் தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா்-சிவகாசி பிரதான சாலையில், மேட்டமலையில் உள்ள இந்திரா குடியிருப்பு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் வசிக்கும் பகுதி பிரதானச் சாலை என்பதால், இந்தச் சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும், பள்ளி மாணவா்கள், பெரியவா்கள் இந்தச் சாலையை கடக்க அச்சப்படுகின்றனா். எனவே, இந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இந்தப் பகுதியில் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத் துறையினா் வேகத் தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.

Dinamani
www.dinamani.com