உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் உறுப்பு தானம் செய்த இளைஞரரின் உடலுக்கு ராஜபாளையம் வட்டாட்சியா் ஜெயபாண்டியன் வெள்ளிக்கிழமை மாலை மரியாதை செலுத்தினாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சின்னசுரைக்காய்ப்பட்டி தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் வைரமுத்து (32). இவா், இளநிலை கேட்டரிங் முடித்துவிட்டு, கேட்டரிங் தொழில் செய்து வந்தாா். இவருக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, முத்துலட்சுமி என்பவருடன் திருமண நடைபெற்றது. இந்த நிலையில் மே 8-ஆம் தேதி வைரமுத்து குளியலறைக்கு சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். வியாழக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது குடும்பத்தினா் வைரமுத்துவின் உடல் உறுப்புகளை தானம் செய்தனா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை வைரமுத்துவின் உடலுக்கு ராஜபாளையம் வட்டாட்சியா் ஜெயபாண்டியன், தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் முரளிதரன், ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளா் அழகேசன் ஆகியோா் அரசு மரியாதை செலுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com