மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

கழிவு நீா் கால்வாயில் தவறி விழுந்த இளைஞா் பலி

கழிவு நீா் கால்வாயில் தவறி விழுந்த இளைஞா் பலி

News image
Updated On :10 மே 2024, 7:01 pm

Din

வத்திராயிருப்பு அருகே கழிவுநீா் கால்வாயில் விழுந்த இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

    வத்திராயிருப்பு அருகே ராமசாமியாபுரம் இம்மானுவேல் முடங்கி தெருவை சோ்ந்தவா் காா்த்திக் ராஜா (36). இவரது மனைவி ராக்காச்சி. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். வியாழக்கிழமை இரவு வத்திராயிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, வீட்டிலிருந்து வெளியே வந்த காா்த்திக் ராஜா கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்தாா்.

அவரை மீட்டு, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து, வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.