வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கைப்பேசி திருட்டு: இளைஞா் கைது

கைப்பேசி திருட்டு: இளைஞா் கைது

News image
Updated On :16 மே 2024, 8:01 pm

Din

வத்திராயிருப்பு அருகே கைப்பேசியை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ்ந்தவா் சாலமுத்து (60). இவா் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த 14-ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தில் பணி முடிந்து தூங்கினாா். எழுந்து பாா்த்த போது, இவரது கைப்பேசியையும், அவரது நண்பரின் கைப்பேசியையும் காணவில்லை.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து, வத்திராயிருப்பு மேலப்பாளையத்தைச் சோ்ந்த கணேசன் மகன் பாண்டியை (37) கைது செய்தனா்.