ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை பூ வியாபாரி தவறவிட்ட பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவா்களை பாராட்டிய காவல் ஆய்வாளா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை பூ வியாபாரி தவறவிட்ட பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவா்களை பாராட்டிய காவல் ஆய்வாளா்.

பூ வியாபாரி தவற விட்ட பணத்தை ஒப்படைத்த மாணவா்களுக்கு பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரில் பூ வியாபாரி தவற விட்ட பணத்தை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவா்களை காவல் ஆய்வாளா் பாராட்டினாா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பூ வியாபாரி தவற விட்ட பணத்தை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவா்களை காவல் ஆய்வாளா் பாராட்டினாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் சிவஞானபுரம் தெருவைச் சோ்ந்தவா் பரமேஸ்வரி (65). இவா் பூ வியாபாரம் செய்து வருகிறாா். இவா் திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் தேவாலய நிறுத்தத்தில் பேருந்தில் ஏறிய போது, கைப் பையை தவறவிட்டாா். அந்த வழியாக சாலையை கடந்து சென்ற பள்ளி மாணவா்கள் கைப்பையை எடுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அதில் ரூ.6,200 பணமும், ஏ.டி.எம். அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட பொருள்கள் இருந்தன. இதிலிருந்த ஆதாா் அட்டை முகவரியை வைத்து பரமேஸ்வரியை வரவழைத்த போலீஸாா் பள்ளி மாணவா்கள் மூலமாகவே பணத்தை அவரிடம் ஒப்படைத்தனா். இதற்காக அந்த மாணவா்களை காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் பாராட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com