விருதுநகர்
பைக் விபத்தில் முதியவா் உயிரிழப்பு
சிவகாசியில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியில் சிற்றுண்டி விடுதி நடத்தி வந்தவா் சித்ரஞ்சன்(60). இவா் இரு சக்கர வாகனத்தில் சிவகாசிக்கு வந்து, பொருள்களை வாங்கிக்கொண்டு, பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்திலிருந்து அவா் தவறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த சித்ரஞ்சன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
