விருதுநகர்
சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
ராஜபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் (71). விவசாயக் கூலித் தொழிலாளியான இவா், வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை மாலை வேலை முடித்துவிட்டு மிதிவண்டியில் ஊருக்கு திரும்பியபோது பின்புறமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேத்தூா் காவல் நிலைய போலீஸாா், சடலத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
